கடல் கடக்க முடியுமா...?

,



யா எனக்கு சரியான பிறந்த தேதி மாதம் வருடம் தெரியாது பலமுறை நான் வெளிநாடு செல்ல முயன்று வருகிறேன் இதுவரையும் அது கைகூடவில்லை மிக குறைந்த சம்பளத்தில் காலம் தள்ளுகிறேன். பெரிய குடும்பம் எனக்கென்று சில கடமைகள் இருக்கிறது. அவைகளை நிறைவேற்ற கண்டிப்பாக நான் கடுமையாக உழைத்தே ஆகவேண்டும். என் மகன் ஜாதகத்தை உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளேன் அவனுடைய ஜாதகபடியாவது நான் வெளிநாடு செல்ல முடியுமா என்று பார்த்து சொல்லவும்.

அரவிந்தன்,தருமபுரி 

கடமைகள் இருக்கிறது அதை நான் நிறைவேற்ற வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதற்கு நிச்சயம் சபாஷ் போடலாம் அதே நேரம் வெளிநாடு சென்று தான் சம்பாதிக்க முடியுமென்று நீங்கள் நினைப்பது மூட நம்பிக்கை என்றே எனக்கு தோன்றுகிறது. 

நம் ஊரில் ஒரு கிலோ அரிசி இருபது ரூபாய் அதே அரிசி வெளிநாட்டில் ஐம்பது ரூபாய் நீங்கள் இங்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதும் அங்கு போய் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதும் ஒன்றுதான் அதற்கு நீங்கள் இங்கயே இன்னும் சிறிது கஷ்டப்பட்டு மூளையை கசக்கி பிழிந்து பாடுபட்டால் அதிகமாக ஐயாயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் அது பலவகையிலும் உயர்ந்ததாகும்.

இருந்தாலும் உங்களது வெளிநாட்டு ஆசை விபரீதமானது அல்ல பத்து பேர் போல் நீங்கள் நினைக்கிறீர்கள் உங்களை பொறுத்தவரை இது சரி கடவுள் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வார் காரணம் அவர் திக்கற்றவருக்கு துணைவன் தீனதயாளன்.

உங்கள் ஆண் குழந்தையின் ஜாதகத்தை ஆராய்ந்தேன் லக்கினத்திற்கு ஒன்பதிற்குடையவன் நிற்கும் ராசிக்கு திரிகோணத்தில் சந்திரன் மற்றும் ராகும் இருக்கிறது இத்தகைய ஜாதகம் உடையவர்களின் தகப்பனார் கண்டிப்பாக கடல்கடந்து பயணம் செய்வார் அதனடிப்படையில் உங்களுக்கு அயல்நாட்டு பயணம் நிச்சயம் உண்டு வரும் நவம்பர் மாதத்திற்கு மேல் பிப்பிரவரி மாதத்திற்குள் நீங்கள் நினைத்தது நடக்கும். எல்லாம் கடவுள் அருளால் நல்ல படியாக இருக்கும்.


மேலும் படிக்க ►

காற்றாய் வீசு மனிதா !

,

      மங்கலமாக பேசகூடாது நல்ல வார்த்தைகளை அதுவும் மங்களகரமான வார்த்தைகளை பேசி பழகுங்கள் கோபம் வரும் போது கூட அத்து மீறி வார்த்தைகளை வெளியிடாதீர்கள் காரணம் ஒருவேளை நீங்கள் கோபத்தால் சொல்லுகின்ற சொல் பலித்துவிட போகிறது. வீணாக மற்றவர்களுக்கு துன்பம் கொடுத்த பாவம் உங்களை வந்து சேர்ந்துவிடும் என்று நமது பெரியவர்கள் நமக்கு அறிவுரை சொல்லவதை பலமுறை கேட்டுருக்கிறோம். அந்த அறிவுரை அப்போது நமக்கு எரிச்சலாக தேவையற்றதாக தெரிந்தாலும் வயது ஏற ஏற அதிலுள்ள சத்தியம் நமக்கு புரிய ஆரம்பிக்கிறது. நாமும் பெரியவர்களை போல நமது குழந்தைகளுக்கு இதே உபதேசத்தை செய்கிறோம்.

கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களை வேதனைபடுத்துவது ஒருவித குற்றமென்றால் அதே வார்த்தைகளை பயன்படுத்தி தன்னை தானே நோகடித்து கொள்வதும் குற்றம் தான் சில மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எதற்கெடுத்தாலும் எந்த ஒரு சிறிய துன்பம் வந்தாலும் நான் செத்து விட போகிறேன். சாவதை தவிர எனக்கு வேறு வழியே இல்லை என்பார்கள். வேறு சிலர் எனக்கு வந்த கஷ்டமட்டும் மற்றவர்களுக்கு வந்திருந்தால் தூக்கில் தொங்கியிருப்பார்கள் ஆற்றிலோ குளத்திலோ விழுந்து உயிரை மாய்த்திருப்பார்கள் என்றும் சொல்வார்கள். தான் செத்துவிடுவேன் என்று சொல்வதும் அவர்களும் செத்துவிடுவார்கள் என்று சொல்வதும் மங்கலமல்ல அமங்கலமே ஆகும்.

பூமியில் பிறந்த அனைவருமே ஒருநாள் சாகபோகிறோம். கடன்காரனிடமிருந்து தப்பிக்கலாம் வருமான வரிதுரையிடமிருந்து தப்பிக்கலாம். தாலிகட்டிய பாவத்திற்காக கூடவே இருந்து சித்தரவதை கொடுக்கும் மனைவியிடமிருந்து கூட தப்பிக்கலாம் ஆனால் கையில் பாச கயிற்றுடன் நெருங்கி வரும் எமனிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இன்று அவன் என்றால் நாளை நான் சாக வேண்டும். முன்பின் என்று கால வித்தியாசம் இருக்குமே தவிர சாவு என்பது சர்வ நிச்சயமானது. அப்படி மரணம்வந்து நமது வாசல் கதவை தட்டி நிற்கும் காலம்வரை ஓரளவாவது பண்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும். படுபாவி ஒழிந்தான் என்று எதிர்த்த வீட்டுக்காரன் சந்தோசப்படும் படி சாக கூடாது.

நிம்யதியாக வாழ்வதற்கும் நிம்மதியாக சாவதற்கும் விரும்பாத மனிதர்கள் யாருமே இல்லை ஆனால் எப்படி நிம்மதியாக வாழ்வது என்பது தான் யாருக்கும் புரியவில்லை ஆனால் அது புரியாத புதிரல்ல மிகவும் சுலபமான வழி அது ஒருவன் நம்மை பார்த்து காரி உமிழ்வது நமக்கு பிடிக்காது. ஓங்கி அறைய வருவது நமக்கு ஆகாது. ஆபாசமான வார்த்தைகளை யாரும் நம்மை நோக்கி பிரயோகம் செய்ய கூடாது. என்று நாம் எதிர்பார்க்கிறோம். அது அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாமும் இந்த கொள்கையை மற்றவர்களிடத்தில் கடைபிடிக்க வேண்டும். அதற்கு ஒரே அருமருந்து கரடுமுரடான வார்த்தைகளை விட்டு விட்டு இனிமையான அன்பான மங்களகரமான வார்த்தைகளை பேசி பழகவேண்டும். அன்பால் உங்கள் இதையத்தில் இருந்து புறப்படுகிற ஒரு சிறிய சொல் கொலைகாரனை கூட சிந்திக்க வைத்துவிடும். வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

நீ புதியதாக எதையும் பேசவில்லை நேற்று யாரோ ஒருவர் பேசியதை இன்று நீ பேசுகிறாய் இதே வார்த்தையை வருங்காலத்திலும் யாரவது ஒருவர் பேசுவார்கள் சீசாவில் அடைக்கப்பட்ட காற்று எப்படி சுற்றி சுற்றி சீசாவிற்குள்ளையே வீசுமோ அதே போலவே நாம் பேசுகின்ற வார்த்தைகள் ஒலி அதிர்வுகளாக அயன வெளியில் சஞ்சாரம் செய்துகொண்டே இருக்கிறது. நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும். மரணம் என்பதே கிடையாது. பேசுகின்ற நான் ஒரு நாள் இல்லாமல் போய்விடலாம் ஆனால் நான் பேசுகின்ற வார்த்தை எப்போதுமே இல்லாமல் போகாது. அதனால் தான் நமது பெரியவர்கள் நல்லதை சிந்தனை செய் நல்லதை பேசு நல்லதை மட்டுமே பேசு என்று சொல்கிறார்கள்.

அயல்நாட்டில் ஒரு விஞ்ஞானி ரோஜா செடி ஒன்றிற்கு திட்டிக்கொண்டே தண்ணீர் ஊற்றினானாம் இன்னொரு ரோஜா செடிக்கு அமைதியாக தண்ணீர் ஊற்றினானாம் மற்றொரு செடிக்கோ புகழ் மொழிகளை பாராட்டு வார்த்தைகளே மட்டுமே சொல்லி கொண்டு தண்ணீர் ஊற்றினானாம். திட்டி வளர்க்கப்பட்ட செடி காய்ந்து போனதாம் மவுனமாக தண்ணீர் ஊற்றிய செடி அப்படியே இருந்ததாம் மாறாக பாராட்டு மொழிகளை கேட்டு தண்ணீர் பெற்ற செடி தளதளவென வளர்ந்து பூத்து குலுங்கியதாம். பேசவே பேசாத செடிகள் கூட நல்ல வார்த்தைக்கும் தீய வார்த்தைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து வைத்திருக்கின்றன. ஆனால் எல்லாம் அறிந்த மனிதன் மட்டும்தான் உணர்ச்சியற்று இருக்கிறான்.

நாம் பேசுகின்ற வார்த்தைகளில் உள்ள ஒலி அதிர்வுகள் நம்மை சுற்றியே எப்போதும் இருக்கிறது. அந்த அதிர்வுகள் நல்லதாக இருந்தால் நாமும் உற்சாகமாக இருப்போம் நம்மை நாடி வருபவர்களும் குதூகலத்தோடு பேசு மகிழ்வார்கள். கெட்டதாக அமைந்துவிட்டால் நம்மை அறியாமலே நமக்குள் ஒரு மந்த கதி புகுந்து விடும். நம்மை நாடி வருபவர்கள் கூட ஏனடா இவனிடம் வந்தோமென்று சலித்து கொள்வார்கள். நோய்வந்து படுக்கையில் கிடக்கும் போது கூட நான் தேறிவிடுவேன் எழுந்து வந்துவிடுவேன். இது என்ன பிரம்மாதமான நோய் இதைவிட கொடிய நோய் வந்தால் கூட என்னால் அதை வெற்றிகொள்ள முடியும். என்று நினைப்பவனே நினைத்தை சொல்பவனே பரிபூரண குணமடைய முடியும்.

ஆனால் இந்த ரகசியம் பலபேருக்கு தெரிவதில்லை எனக்குதெரிந்த ஒரு பொற்கொல்லர் இருந்தார் எப்போது அவர் என்னை பார்கிறாரோ அப்போதெல்லாம் அழுது புலம்புவார் தொழிலே சரியில்லை மனைவி மக்களுக்கு சோறு சமைக்க அரிசி வாங்க கூட கையில் காசுயில்லை என்பார் ஆனால் அதிசயம் என்னவென்றால் போனமாதம் நன்றாக வியாபாரம் நடந்தது இப்போது தான் சரியில்லை என்பார் இதே வசனத்தை தான் கொஞ்சம் கூட மாறாமல் போனமாதம் சொல்லியிருப்பார். இவருக்கு வியாபாரத்தில் ஒன்றும் குறைவு கிடையாது. வருவது போதும் என்ற மன நிறைவு இல்லாததனால் எதிலும் அவரால் திருப்தியாக சந்தோசமாக மன சாந்தியோடு வாழமுடியவில்லை அவர் மட்டுமல்ல அவரிடம் வேலைபார்க்கும் சிறு பையன் கூட இப்படியே தான் பேசுவான்.

திருப்தியில்லாதவன் வாழ்க்கை ஓட்டை படகு போன்றது. அது எந்த பயணத்திற்கும் உதவாது இருப்பதை வைத்து கொண்டு வாழ நினைப்பவன் யாரென்றால் எப்போதும் பார்த்தாலும் சிரித்த முகத்தோடும் மங்களகரமான வார்த்தை பரிமாற்றங்களோடும் இருக்கிறானோ அவன் தான் எனவே மனதில் எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் தராமல் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசி பழகி பாருங்கள் வாழ்க்கையில் உள்ள சுவைகள் அனைத்தும் தெளிவாக உங்கள் கண்களுக்கு தெரியும்.

நமது தோட்டத்தில் மேய்கின்ற கோழிகளை பாருங்கள் அவைகள் எவ்வளவு சுதந்திரமாக சுகமாக நடமாடுகிறது என்பதை உணர்வீர்கள் இதே கோழிகளை பிடித்து கசாப்பு கடைக்காரனிடம் கொடுங்கள் உற்சாகமாக இதுவரை கொக்கரித்து கொண்டிருந்த கோழி பெட்டி பாம்பாக கப்சிப் என்று அடங்கி விடும். காரணம் நமது வீட்டு தோட்டத்தில் யாரும் கோழிகளை கொல்ல வேண்டும். அதன் மாமிசத்தை துண்டு துண்டாக வெட்டி எடைபோட வேண்டும். என்று நினைப்பதில்லை ஆனால் கசாப்பு கடையில் அந்த சிந்தனையை தவிர வேறு எதுவுமே இல்லை கோழியை கூட மனித சிந்தனை பாதிக்கிறது. நீங்கள் நல்லது நினைத்தால் உங்கள் செல்ல பிராணிகள் கூட சந்தோசப்படும். கெட்டது நினைத்தால் அவைகளும். துக்கப்படும்.

உங்கள் கெட்ட எண்ணங்களுக்கு பிராணிகளை கூட தாக்கும் சக்தி இருக்கும் போது சதா அதே சிந்தனையில் நீங்கள் உங்கள் வீடுகளில் வாழ்ந்தால் அந்த வீட்டிற்குள் நல்ல அதிர்வுகள் எப்படி இருக்கும். வீட்டில் உள்ள மற்றவர்களின் மன நிலையும் எப்படி குளறுபடியாகும் என்பதை சற்று நினைத்து பாருங்கள் சிலர் சொல்வார்கள் எவ்வளவு நேரம் வெளியில் சுற்றினாலும் அலுப்பு தெரியவில்லை வீட்டுக்குள் வந்ததும். சோர்வு வந்துவிடுகிறது. என்பார்கள் இதற்கு காரணம் எதிர்மறை எண்ணங்கள் வீடு முழுவதும் நிறைந்திருப்பதே ஆகும்.

நாம் வாழுகின்ற வீட்டை வடமொழியில் கடாக்க்ஷா என்று அழைப்பார்கள் அதாவது அன்பு,அருள்,தயவு என்பதன் இதன் பொருளாகும். அன்பு,அருள்,தயை என்பது தான் அன்னை மாகாலக்ஷ்மியின் அடையாளமாகும். நல்ல எண்ணங்களும் நல்ல வார்த்தைகளும் எந்த வீட்டில் நிறைந்திருக்கிறதோ அந்த வீட்டிலேயே மகலக்ஷ்மியாகிய திருமகள் வாசம் செய்வாள் என்று நமது முன்னோர்களின் கூற்று நல்ல எண்ணத்தின் அலைகள் மட்டுமே வெற்றியை தேடி தரும். எனவே இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவன் சொன்னானே அதை உங்கள் வாழ்க்கை தத்துவமாக கொள்ளுங்கள். அண்டம் சிதறினாலும் கடல்பொங்கி எழுந்தாலும் கலங்கிடவே மாட்டேன் என்று உறுதியை இதையத்திற்குள் நிரப்புங்கள் உங்களால் நல்லதை மட்டுமே சிந்திக்க முடியும். நல்லதை மட்டுமே பேச முடியும்.

மங்களகரமான வார்த்தைகள் வாழ்க்கை பாதையையே மாற்றி விடும். நேற்றுவரை தூக்கத்தில் இருந்தவன் கூட நன்றாக சிரித்து பழகும் ஒருவரின் நட்பு கிடைத்துவிட்டால் தனது தூக்கத்தை மறந்து துக்கத்தை துறந்து ஒரு போராட்ட காரனாக எழுந்து நிற்பான் எனவே அமங்கலம் தவிர்த்து மங்களம் மட்டுமே பேசுங்கள் இனிய தென்றல் காற்றாய் எங்கும் வீசுங்கள்.



மேலும் படிக்க ►

வேலிருக்க வினையில்லை...!

,
இந்து மத வரலாற்று தொடர் 28

    னது தகப்பனார் தனது இளமை காலம் முதலே இலங்கையில் வாழ்ந்தவர் கொழும்பு நகரில் தான் அவர் ஆரம்பத்தில் வியாபாரம் செய்தார் இதனால் அவருக்கு ஈழதமிழர்கள் பலர் நண்பர்கள் அந்த தமிழர்களோடு ஏற்பட்ட உறவாலோ அல்லது இயற்கையாகவே அவரிடம் இருந்த தமில்பற்றாலோ சுத்தமான தெளிவான அச்சாரம் பிசகாத வார்த்தைகளையே பயன்படுத்தி பேச வேண்டும் எழுத வேண்டும். என்று வலியுறுத்துவார் நான் எனது ஆரம்ப காலத்தில் மலையாள பகுதியில் வாழ்ந்ததனால் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சரியாக வராது இன்றும் கூட அப்படி தான் என் உச்சரிப்பு இருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஆனாலும் நான் தெளிவாக தமிழில் பேச எனது தந்தையார் சிபாரிசு செய்தது அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழின் முத்தை தரு என்ற பாடலைதான்.

இந்த பாடலை மிக வேகமாக வாய்விட்டு சொல்லும் போது தெளிவான உச்சரிப்பு நமக்கு இயற்கையாக வந்துவிடுகிறது. காரணம் அந்த பாடலில் அருணகிரிநாதர் பயன்படுத்தி இருக்கும் மிக கடினமான வார்த்தைகள் சந்த வேகம் என்று சொல்லலாம் ஆனால் எனக்கு அவைகள் மட்டும் தான் காரணம் என்று தோன்றவில்லை அவற்றையும் தாண்டி முருகனது திருவருள் தமிழ் மொழியின் பால் அதிகமாக உள்ளது குறிப்பாக அருணகிரி நாதரின் திருப்புகழில் முருகனின் அருள்வெள்ளம் மிக அதிகமாகவே பாய்ந்தோடுகிறது. அதனாலேயே அந்த பாடலை சொன்னவுடன் தடித்து போன நாக்குகள் கூட தெளிவான வார்த்தைகளை பேசுகிறது என்பேன் காரணம் திருபுகழ் முருகனை பாடுகிறது. முருகன் தமிழை உலகுக்கு தந்தவன் அதனால் தான்கொடுத்த தமிழை வாழவைக்க பாடலை சொன்னவுடன் தெளிவான உச்சரிப்பை பக்தர்களுக்கு தருகிறான் என்று சொல்வேன்


முருகன் தமிழர்களின் தெய்வம் இதில் ஐயமில்லை அதற்காக முருகன் மட்டுமே ஆதிகால தமிழர்களால் வணங்கப்பட்டான் என்று சொன்னால் அதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. காரணம் தொன்மைக்கால தமிழ்நாட்டில் கண்ணனும் அவன் அண்ணனுமான பனைகுடியோன் என்ற பலராமனும் வணங்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே திருமாலை போலவே முருகனும் தமிழ் கடவுள் என்று கூறினால் அதை ஒத்துகொள்ள யாருக்கும் தயக்கம் வராது. திருமுருகாற்று படையிலும் பரிபாடலிலும் தன்நீகர் இல்லாத பாட்டுடை தலைவனாக பாடப்படும் திருமுருகன் குறுஞ்சி நிலத்து கடவுளாவான். இந்த குறுஞ்சி நில கடவுளான முருகனே அகத்தியருக்கு முதல்முதலில் தமிழ் ஒலியையும் அதன் இலக்கணத்தையும் தெளிவு படுத்தி அகத்தியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலை கொடுத்தான்.

தமிழ் நூலை மட்டும் கொடுத்தவன் அல்ல முருகன் பரம்பொருளான சிவபெருமானுக்கு பிரணவ பொருளை அதாவது ஓம் என்ற பிரணவ நாத வடிவிற்கு தமிழிலேயே உபதேசம் செய்தவன் சுவாமி நாதனான எம்பெருமான். இதனை தான் மிக அழகாக தமது திருப்புகழில் அருணகிரிநாதர் மயக்கும் வார்த்தைகளை போட்டு பாடுகிறார்.
கொற்றைச் சடையார்க்கு ஒற்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழாற் பகர்வோனே

என்று தகப்பன் சுவாமியான கதையை தெளிவுபடுத்துகிறார். மதுரை மாநகரில் முதற்சங்கமிருந்த ஆதி தமிழகத்தில் குமரனே நேரில் வந்து தமிழாய்ந்த அழகை நக்கீரரும் இறையனார் களவியலுரை என்ற நூலில் தெளிவாக குறிப்பிடுகிறார். இதையே எளிமைபடுத்தி குமரகுருபர சுவாமிகள் சங்க தமிழின் தலைமை புலவா என்று ஆறுமுகனை பாராட்டுகிறார்.


சரவண பொய்கையில் பிறந்த சண்முகனை நாம் சிவகுமாரனாக அறிவோம். சக்தி மைந்தனாகவும் வணங்குவோம். வள்ளி தேவயானையின் நாயகனாகவும் போற்றுவோம் சூரபத்மனின் உடல்கிழித்த வீரனாகவும் பாதம் பணிவோம். ஆனால் இவைகளாக மட்டும் முருகன் தமிழ் புலவர்களுக்கு தெரியவில்லை கையில் வேலும் மயிலும் கொண்ட அந்த நாயகன் தமிழாகவே தெரிந்தான் ஆம் தமிழில் ஒவ்வொரு உறுப்பும் திருமுருகனின் திவ்விய தேகமாகவே தமிழ் கவிஞர்களுக்கு தெரிந்தது. புலவர் புராணம் என்ற அறிய நூலை தமிழுக்கு தந்த தண்டபாணி அடிகள் முருகனை
கண்நிகர் மெய்யும் சென்னிக்
கணம்உறழ் இனத்தின் கூறும்
திண்ணிய புயங்க ளேபோல்
திகழ்தரும் உயிரும் வேறொன்
றேண்ணிடற் கரிய தாகும்
எஃகமும் இயலில் காட்டும்
புண்ணிய முருகன் செய்ய
பொற்பதம் போற்றி வாழ்வோம்

என்று பாடுகிறார். இந்த பாடலை மேலோட்டமாக பார்க்கும் போது தண்டபாணி அடிகள் என்ன சொல்கிறார் என்று நமக்கு அவ்வளவு விரைவில் விளங்காது சற்றேனும் தமிழ் இலக்கண அறிவு நமக்கிருந்தால் அதை கொண்டு இந்த பாடலின் பொருளை அறிய முயற்சி செய்தால் அடிகளாரின் தமிழ் புலமை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும் அவர் தமிழ் மொழியில் வல்லினம் மெல்லினம் இடையினம் என்று வழங்கபடுகிற மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் முருகனின் அருள் விழிகளாகவும். அகரமுதலிய உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் அவனது அழகிய பன்னிரு புஜங்களாகவும் தனிநிலை எனப்படும் ஒரே ஒரு ஆயுத எழுத்து முருக பெருமானின் திருக்கரத்தில் இருக்கின்ற ஞான வேலாகவும் இருக்கிறது என்று சொல்கிறார். எனவே தமிழ் என்றால் முருகன் முருகன் என்றால் தமிழ் என்பது நம்மை போன்ற சாதாரண ஜீவன்களுக்கு கூட எளிதில் விளங்கி விடுகிறது.



ஒரு சிறிய குழந்தை முருகனை கூவி அழைத்தால் அவன் பாலமுருகனாக பாலசுப்பிரமணியனாக வருவான் இளைஞன் ஒருவன் அவனை அழைத்தால் சுப்ரமணினாக வருவான் சதா சர்வகாலமும் கலைகளையே தனது உயிர் மூச்சாக கொண்டு வாழும் கலைஞர்கள் தங்கள் துயரம் போக்க முருகனை அழைத்தால் அவன் ஆறுமுகனாக வருவான் நாட்டை காக்க எல்லையில் கண்ணிமிக்காமல் காவல் நிக்கிறானே ராணுவ வீரன் அவன் கூட முருக பெருமானை வரவேண்டி அழைத்தால் தேவ சேனாதிபதியாக அவன் வந்து நிற்பான் மந்திரம் வேண்டும் மந்திரத்தால் தனது மதி மயக்கம் தீர வேண்டும் என்று ஆசைபடும் உபாசகன் அழைத்தால் சுவாமிநாதனாகவும் வருவான் இல்லறம் வேண்டாம் துறவறமே தூய வாழ்வு என்று கடுதவம் செய்யும் ஞானிகள் அழைத்தால் அவன் தண்டாயுதபாணியாக வருவான். பக்தி பரவசத்தால் யார் எப்படி அழைத்தாலும் அழைத்தவர் குரலுக்கு வந்து காவல் செய்வதே சிவ குமாரனின் கருணை நிலையாகும்.

இப்படி அழைத்தவர் குரலுக்கு பல வடிவங்களை தாங்கி வரும் முருகன் எப்படியெல்லாம் திருவுருவம் கொண்டுள்ளான் என்பதை குமார தந்திரம் தணிகை புராணம் போன்ற புனித நூல்கள் தெளிவாக விவரிக்கின்றன. ஞான சக்திதரன், கந்தசாமி, தேவசேனாதிபதி, சுப்பிரமணியன், களிற்றூர்திப்பெருமான், சரவணபவன், கார்த்திகேயன், குமரன், ஆறுமுகன், தாரகாந்தர், சேனாதிபதி, பிரம்மசாந்தன், வள்ளிகல்யாண சுந்திரன், பாலசுப்ரமணியன், கிரவுஞ்ச பேதனர், சிகிவாகனர், என்று பதினாறு திருநாமங்களை சொல்லி பதினாறு வடிவங்களையும் நமக்கு அந்த நூல்கள் காட்டுகிறது.


முருகன் தமிழ்வடிவம் மட்டுமல்ல அவன் ஞான வடிவம், அறிவு வடிவம், அன்பு வடிவம் அத்தகைய முருகனின் திருவுருவத்தில் இருக்கும் ஒவ்வொரு கருவிக்கும் கூட தனிதனி தத்துவங்களுண்டு வேல்பிடித்த முருகனை வேலன் என்று நாம் வழிபடுகிறோம் முருகனை முருகனாக உருவகபடுத்தி வணக்குவதற்கு முன்பு ஆதிகால தமிழ் மக்கள் வேலை மட்டுமே குறியீடாக கொண்டு வழிபாடு செய்திருக்கிறார்கள். வேல் என்பது வெற்றியின் அடையாளம் இன்று கூட திருப்பரங்குன்றத்தில் அபிசேக ஆதாரனை வேலுக்கு மட்டுமே செய்யபடுகிறது. திருமுருகனின் திருநாமங்கள் பலவாக இருந்தாலும் கதிர்வேல், வடிவேல், ஞானவேல், வஜ்ரவேல், சிங்காரவேல், குழந்தைவேல், வீரவேல், வெற்றிவேல் என்ற வேல்தாங்கிய பெயர்களே பெருமிதமாக தமிழ்மக்களால் துதிக்கபடுகிறது. அதற்கு சரியான காரணமும் உண்டு

வேல் பார்பதற்கு எப்படி இருக்கும் கீழ்பகுதி விரிந்தும் மேல் பகுதி கூர்மையாகவும் இருக்கும். விரிந்த கீழ்பகுதி மனிதனுக்கு இருக்க வேண்டிய பரந்த அறிவை காட்டுகிறது. ஒரு மனிதன் பல துறையிலும் அறிவு பெறவேண்டும். தெளிவு பெறவேண்டும், நுணுக்கம் பெறவேண்டும், நிபுணத்துவம் பெறவேண்டும் இத்தனையும் பெற்ற பிறகு அனுபவம் என்பது கனிந்து கனிந்து கூர்மையான ஞானம் பிறக்கிறது. அந்த ஞானமே வேலின் மேல் பகுதியே நமக்கு காட்டுகிறது. ஞானமானது கூர்மையாக இருந்தால் அது மன மாசுகளை கழைந்து இறைவனின் பாதார விந்தங்களில் மனித ஆத்மாக்களை சரணாகதி அடைய வைக்கிறது.


மேலும் படிக்க ►

காமக் கொடூரன் ஜாதகம் !

,

   குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்களது ஜோதிட பதில்களை தொடர்ந்து படித்து வருகிறேன். விளக்கமாகவும் விரிவாகவும் விஷய ஞானத்தோடும் பல பதில்களை தந்து பலருக்கும் பயன்பட செய்கிறீர்கள் எனக்கொரு சிறிய சந்தேகம் சில நாட்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவரை பார்க்க சென்றேன் அவர் தொழில் முறை ஜோதிடர் நான் போகும் போது ஒரு ஜாதகத்தை பார்த்து பலன் சொல்லி கொண்டிருந்தார் அது ஒரு ஆணின் ஜாதகம் அவனுக்கு பெண்ணை கொடுப்பதா? வேண்டாமா? என்று வந்தவர் கேட்டு கொண்டிருந்தார் அதற்கு என் ஜோதிட நண்பர் தயவு செய்து இவனுக்கு பெண் கொடுக்காதீர்கள் இவன் ஒரு காம வெறியன் குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வராதவன் என்று பதில் சொன்னார் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஜாதகத்தை பார்த்து அவன் காம வெறியனா? இல்லையா? என்று சொல்ல முடியுமா? என்று எனக்கு தோன்றியது. தயவு செய்து இதற்கு விளக்கம் தாருங்கள்.

குருராஜ்.மதுரை

   ரு ஜாதகத்தை தெளிவாக ஆராயும் போது குறிப்பிட்ட ஜாதகருக்கு இன்ன வயதில் இன்ன நோய் வரும் என்பதை அறிந்து கொள்ளள முடியும் எனும் போது அவனது குணாதிசையத்தை கணிக்க முடியாதா என்ன?  கணக்கு போடுவதில் நிபுணத்துவமும் வாக்கு பலிதமும் இருந்தால் அனைத்து விஷயங்களையும் தெளிவாகவே ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம் ஜோதிட பலன்கள் தவறுவது கணக்கு போடுவதில் செய்யும் தவறே தவிர வேறு ஒன்றுமில்லை

ஆண் பெண் யாராக இருந்தாலும் அவர்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரன்களும் இணைந்து இருந்தாலும் ஒன்றுக்கொன்று பார்வை இருந்தாலும் அவர்களுக்கு காம உணர்வு மிக அதிகமாகவே இருக்கும் அதே போல சுக்கிரன் சந்திரன் இவற்றோடு புதனும் சேர்க்கை பெற்றால் உடலுறவை பலரோடு வைத்து கொள்வார்கள்

கள்ள காதல் உறவு வைக்கும் பலரின் ஜாதகத்தை பார்த்தால் சுக்கிரன் சந்திரன் ராகு ஆகிய மூன்று கிரகங்களும் சேர்க்கை பெற்று இருக்கும் அதே போல காம கொடூரன் என்று அழைக்கப்படும் மனிதர்களுக்கு சுக்கிரன் சந்திரன் புதன் ராகு ஆகிய நான்கு கிரகங்களும் சேர்க்கை பெற்று இருப்பதை அறியலாம்

காமம் என்பது இறைவன் படைப்பில் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக கொடுக்கப்பட்ட ஒரு உணர்வு என்றாலும் அது அத்துமீறி அளவுக்கு அதிகமாக செல்லும் போது சமூதாய சீர்கேடாகவும் தர்ம வழிக்கு விரோதமாகவும் அமைந்து விடுகிறது. ஒருவனிடம் ஆயிரம் நல்ல இயல்புகள் இருக்கலாம் ஆனால் அவற்றையும் மீறி காம உணர்வு அதிகமாக இருந்தால் அவன் முற்றிலும் நிலைகுலைந்து விடுவான் இதற்கு சரியான உதாரணமாக ராவணனை காட்டலாம்

ராவணன் சிறந்த யுத்த தந்திரி, இசை மேதை, வேத விற்பன்னன் ஆனாலும் காமுகன் வரம்பு மீறிய அவனது காம உணர்வு அவனிடமிருந்த நல்ல இயல்புகள் அனைத்தையும் மறைத்து விட்டது. குழி தோண்டி புதைத்து விட்டது. எனவே உயிர்களுக்கு இயல்பான உணர்வு தான் காமம் என்றாலும் அதிலும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கண்டிப்பாக வேண்டும். அது இல்லாதவர்கள் அழிந்து போவார்கள்

நான் மேலை சொன்ன கிரக சேர்க்கை பெற்றவர்கள் தங்களது மனதை அடக்கி காம விகார எண்ணங்களை கட்டுபடுத்தி வாழ்ந்தார்கள் என்றால் வாழ்வில் அனைத்து துறையிலும் வெற்றி பெறலாம் சாதனை படைக்கலாம் மாறாக காமம் இழுத்த இழுப்புக்கு ஆட்படுவார்கலேயானால் மரண குழியில் அல்ல அல்ல நரக குழியில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். இது நிச்சயம்.


மேலும் படிக்க ►

பில்லி சூன்ய விளக்கங்கள்.

,

 அத்யாயம் 2

      ரு பெரியவருக்கு இந்த சமூதாயத்தின் மீது அடக்கமுடியாத கோபம் என்ன உலகம் சார் இது மனுஷன் எவனிடமும் ஈவு இறக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது ஆட்டைகடித்து மாட்டை கடித்து கடேசியில் மனுஷனையே கடித்த கதையாக ஆகிவிட்டது அப்பா அம்மா மீது மரியாதையில்லை அண்ணன் தம்பிகளிடத்தில் பாசமில்லை கணவன் மனைவிக்கிடையில் நம்பிக்கை இல்லை பிள்ளை பாசம் என்பது கூட போலி நாடகமாக இருக்கிறது. என்கிறார்

இன்னொறுவர் சொல்கிறார் கண்ணுக்கு எதிரே ஒரு மனிதன் உயிருக்காக போராடிகொண்டிருந்தாலும் அவனை காப்பாற்றுவது பற்றி சிந்திக்காமல் தான் பயணபோகவேண்டிய பேருந்துக்காக சலிப்போடு காத்திருப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள் உயிரை பாதுகாக்க வேண்டிய டாக்டர்கள் கூட பணத்தை பார்க்கிறார்களே தவிர தங்களது கடமையை உணரவில்லை மருத்துவர்களே பாதைமாரிய பிறகு அரசியல் வாதிகள் அதிகாரிகள் சமூகநல ஆர்வலர்கள் பொது பணியாளர்கள் காவலர்கள் போன்றோர்கள் மாறாமலா இருப்பார்கள் அதனால் தான் இந்த நாடு கெட்டு குட்டிசுவராகி விட்டது என்கிறார்.

இதற்கு வேறொருவர் இப்படி எல்லோரும் கெட்டு போனதற்கு சினிமாதான் முழுமுதற்காரணம் எப்படி தப்பு பண்ண வேண்டும் தப்பு செய்துவிட்டு தப்பித்துகொள்ள என்னென்ன வழி உண்டு தவறுகளை மூடிமறைப்பது எப்படி மறைத்துவிட்டு நல்லவர் போல் நடிப்பது எப்படி என்பவைகளை சினிமா தெளிவாக காட்டிவிடுகிறது. இதுமட்டுமா கொலை செய்வது கற்பழிப்பது ஊரான் மனைவியை மானபங்கம் செய்வது பொது பிரச்சனைகளை ஜாதி கலவரங்களை தூண்டிவிடுவது எப்படி என்றெல்லாம் ஒரு அகராதியை போல் சினிமா விளக்கி விடுகிறது. அதை பார்ப்பவன் மிக சுலபமாக தீய வழிகளை தெரிந்துகொள்கிறான் எனவே இந்த சமூதாயம் நிஜமாகவே முன்னேற வேண்டுமானால் ஒரு பத்து வருடத்திற்கு சினிமாவையும் தொலைக்காட்சியையும் தடைசெய்ய வேண்டும் என்கிறார்.


இவர்களது பேச்சில் நியாயமில்லை நிஜமில்லை என்று எவரும் சொல்ல இயலாது ஆனால் எதார்த்தமாக பார்க்கும் போது இப்படி பட்டவர்களின் கூற்று முற்றிலும் சரி என்று நம்மால் ஒத்துகொள்ள முடியவில்லை சினிமா வருவதற்கு முன்பு மட்டும் இந்த சமூகத்தில் தீங்குகள் நடக்காமலா இருந்தது என்று நாம் கேட்கபோவதில்லை சினிமாவில் தீமைகள் மட்டும் தான் காட்டபடுகிறதா நல்ல விஷயங்கள் எதுவுமே சொல்லப்படவில்லையா என்று கேட்க தோன்றுகிறது. காரணம் தாய்பாசம் உடன்பிறந்தவர் பாசம் நட்பு நேர்மை கடமை தவறாமை என்று எத்தனையோ நல்ல விஷயங்கள் சொல்லபடுகிறதே அவைகளை எல்லாம் யாருமே கவனத்தில் கொள்ளவில்லையா? அல்லது அவைகள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இல்லையா என்றும் நமக்கு தோன்றுகிறது.

சினிமா பார்க்கப்படும் மனிதர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மையானால் நூற்றுக்கு ஐம்பது பேர்களையாவது நல்வழி படுத்திருக்க வேண்டுமே அவைகளை பற்றி யாருமே சொல்லவில்லையே அது ஏன் ஆட்டோ சங்கர்களையும் ஜெயப்ரகாஷ்களையும் மட்டும் தான் சினிமா உருவாக்கி இருக்கிறதா? என்ற கேள்விக்கு பக்கம் சாராமல் நடுநிலையோடு சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் நமது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே உள்ள மக்கள் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களை உடனுக்குடன் புரிந்து கொள்கிறார்கள் அதை பற்றி அதிகமாக பேசுகிறார்கள் ஒரு நாளில் சில மணி நேரங்களையாவது செலவிட்டு அவைகளை பற்றி சிந்திக்கிறார்கள் இது உலக மக்கள் அனைவரின் பொதுவான மனோதத்துவமாகும் ஒரு பெண் தன்னை கைபிடித்து இழுக்க வந்தவனை செருப்பால் அடித்து விட்டாள் என்றால் அது அதிகவேகமாக பரவாது அதே பெண் அவனை நடுத்தெருவில் கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள் என்றால் வினாடி நேரத்தில் ஊர் முழுவதும் பரவிவிடும்.

அதாவது ஒரு விஷயத்தில் உள்ள கெடுதியான தன்மை மனித மனத்தை ஈர்ப்பது போல நல்ல தன்மை என்பது அவ்வளவாக ஈர்ப்பது இல்லை சினிமா மட்டுமல்ல மாந்தீரிகம் என்பதும் ஏறக்குறைய அப்படி தான் மாந்திரிக சாஸ்திரத்தில் ஏராளமான நன்மைகள் மலிந்து கிடக்கிறது. மந்திரங்களை வைத்து ஆக்கபூர்வமான காரியங்கள் எப்படியெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி ஏராளமான விளக்கங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன ஆனால் அவைகளை பற்றி நிறைய பேருக்கு தெரியாது வசியம் மோகனம் மாரகம் என்ற கெட்ட விஷயங்களை அறிந்து வைத்திருக்கின்ற அளவிற்கு நல்ல விஷயங்களை யாரும் தெரிந்து வைத்திருக்க வில்லை


ஒரு சமயம் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் மந்திரங்களால் கேடு செய்ய முடியுமா? என்பதை பற்றி நேரடி பேட்டி கொடுத்திருந்தேன் அதை பார்த்துவிட்டு நிறைய பேர் ஐயோ சுவாமி நாங்கள் உங்களை ஒரு துறவி என்று தான் நினைத்து கொண்டிருந்தோம் நீங்கள் ஒரு மந்திரகாரரா எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று கேட்டார்கள் அப்படி கேட்டவர்களின் பலர் என்னிடம் உள்ள தொடர்பை உடனடியாகவே துண்டித்து கொண்டார்கள் அவர்களை எண்ணி எனக்கு சிரிப்புதான் வந்தது காரணம் அறியாமையில் கிடக்கும் அவர்களை பற்றி வேறு என்ன என்னால் சொல்ல முடியும். மாந்திரிகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே போதும் அது ஏவல், பில்லி சூன்யம் தானே அவைகளை பற்றி எதற்க்காக பேச வேண்டும் அவைகளை தெரிந்து வைத்து ஆவது என்ன என்று பலர் நினைக்கிறார்கள் வேறு சிலரோ அவைகளை பற்றி பேசினாலே தீங்கு வந்து விடும். என்று நினைக்கிறார்கள் அந்த அளவிற்கு மாந்திரிகத்தை பற்றிய அச்சமும் பயமும் சந்தேகமும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

பயப்படாமல் என்ன செய்வது கிராமத்தில் நன்றாக மளிகைக்கடை வியாபாரம் நடத்தி வந்தேன் ஆள் சம்பளம் போக்குவரத்து செலவு போக தினசரி கையில் ஐநூறு ரூபாய் கண்டிப்பாக நிற்கும் குடும்பத்தை நடத்துவதற்கு கஷ்டபட்டதே கிடையாது. பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தேன் தாய்தகப்பனுக்கு எந்த குறையுமில்லாமல் பார்த்து கொண்டேன் மிக முக்கியமாக பெண்டாட்டியின் தேவைகள் எதுவோ அத்தனையையும் தட்டாமல் செய்து வந்தேன் ஒரு வெள்ளிகிழமை குடுகுடுப்பைகாரன் ஒருவன் வந்து பிச்சை கேட்டான் வெள்ளிகிழமை அதுவுமாய் காலையில் வந்து பிச்சை கேட்கிறாயே கடையில் எதவது போனி ஆகட்டும் பிறகு வா என்றேன் அதெல்லாம் முடியாது இப்போதே பிச்சை போடு என்றான் அதிகாரமாக எனக்கு கோபம் வந்துவிட்டது போடா வெளியே என்று அவனை படித்து தள்ளிவிட்டேன் இன்னும் பதினைந்து நாளில் என்ன நடக்கிறது பார் நடுத்தெருவுக்கு நீ வருவாய் என்று சபித்துவிட்டு போனான்.

இவனென்ன ஊசியை நாட்டி அதன் மேல் தலைகீழாக நின்று தவம் செய்யும் யோகியா சாபம் கொடுப்பான் அது பலிக்குமென்று நான் கவலைபடுவதற்கு அவன் சாபத்தை நான் பொருட்படுத்தவே இல்லை மறந்தும் போய்விட்டேன் கடேசியில் அடுத்த வெள்ளி கிழமை அதாவது எட்டாவது நாள் கடையில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்து தீ பிடித்தது ஒரு சொம்பு தண்ணீரில் அணைந்து போகவேண்டிய நெருப்பு என் கடையே சாம்பலாக்கி விட்டுதான் அணைந்தது அவன் சொன்னபடி பதினைந்து நாளில் அல்ல எட்டே நாளில் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன் பத்து பேருக்கு வேலை கொடுத்த நான் இன்று கோயம்பேடு பஸ்டாண்டில் மூட்டை தூக்கி பிழைப்பை நடத்துகிறேன் இப்படி மாந்திரிகத்தால் ஒருவர் அல்ல பலரும் பாதிக்கப்படும் போது அதில் நன்மை இருக்கிறதா? தீமை இருக்கிறதா? என்றா ஆராய முடியும். என்று உங்களில் யாரோ ஒருவர் பேசுவது என் காதில் விழாமல் இல்லை.


வாஸ்தவம் தான் மாந்திரிகத்தில் எவ்வளவோ நல்ல சங்கதிகள் இருந்தும் அதை முழுமையாக அறிந்தவர்கள் கூட கெட்ட விஷயங்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். அல்லது கெட்ட காரியங்களால் ஏற்படும் தீய பலன்களை தடுப்பதற்கே தங்களது மாந்திரிக சக்தியை பயன்படுத்துகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள் கதையே இப்படி இருக்கும் போது தெரியாதவர்களை பற்றி குறைகூறுவதில் அர்த்தமில்லை பொதுவாக மாந்திரிகத்தால் செய்யபடுகின்ற பில்லி சூனியத்தை பற்றி மக்கள் பல நேரங்களில் பேசுகிறார்கள் சில மந்திரவாதிகளும் அந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் அப்படி என்றால் என்ன? அதன் உண்மையான பொருள் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. குறிப்பாக ஏவல், சூனியம் என்பதை கூட சிறிது விளங்கி கொள்ள முடிகிறது. பில்லி என்பதை பற்றி அதிகமாக புரிந்துகொள்ள முடியவில்லை எனவே அவைகளை சிறிது விளக்க முடியுமா என்று என்னிடம் கேட்கிறார்கள் அவர்களுக்கு விளக்கம் தரவேண்டியது எனது கடமை என்று நினைக்கிறேன் அந்த கடமையே செய்து முடித்த பிறகே மாந்திரிகத்தை பற்றிய முழுமையான தகவல்களை கொடுத்தால் நன்றாக இருக்குமென்றும் கருதுகிறேன்.

பில்லி என்ற வார்த்தை வடமொழியிலோ தமிழிலோ கிடையாது இந்த வார்த்தை புத்தர் பேசிய பாலி மொழியில் உள்ளதாகும் இதற்கு நேரடியான பொருள் கட்டுபடுத்துதல் என்று சொல்லலாம் அதாவது மந்திர சக்தி அல்லது சித்தி பெற்ற ஒருவர் ஒரு சாதாரண மனிதனை உடல் ரீதியிலும் மன ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து கட்டு படுத்துவதே பில்லி ஆகும். அதாவது பில்லி மந்திரம் கற்ற ஒரு மந்திரவாதி ஒருவனை மன நோயாளியாக ஆக்கிவிட முடியும். நல்ல ஆரோக்கியமுள்ளவரை நோயாளியாக படுக்கையில் தள்ளிவிடவும் முடியும். ஒருவனது, செயல்களை தலைகீழாக மாற்றி தோல்விகளை மட்டுமே அவன் பெறும்படி செய்துவிடவும் முடியும். இது தான் பில்லி என்பதன் விரிவாக்கம்.

அடுத்ததாக சூன்யம் என்ற வார்த்தை வருகிறது. இது வடமொழி சொல் என்பது எல்லோருக்கும் தெரியும். சூன்யம் என்றாலே வெறுமை என்பது பொருளாகும். செல்வந்தனான ஒருவனை ஒன்றுமே இல்லாத வறியவனாக நடுத்தெருவில் நிறுத்துவதன் மந்திர பெயரே சூன்யம் என்பதாகும். இந்த சூன்ய மந்திரத்தால் எவரை வேண்டுமானாலும். அழித்து விடலாம் கைகால்களை முடக்கி விடலாம் சம்மந்த பட்டவருக்கு தெரியாமலே வயிற்றில் வசிய மூலிகைகளை செலுத்தி விடலாம் கருவில் உள்ள குழந்தயை கூட கொன்றுவிடலாம்.


தனக்கு கீழே உள்ள ஒருவனை இந்த வேலையை செய் என்று சொல்வது எவலாகும். அதே போன்றது தான் மாந்திரிகத்தில் உள்ள ஏவல் முறையாகும் மந்திர சக்தியால் மந்திரவாதியின் கட்டுபாட்டுக்குள் இருக்கின்ற சில தீய சக்திகளை எதிரிகளின் மீது ஏவி விட்டு அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவதே ஏவல் மந்திரத்தின் முக்கிய உறுப்பாகும் இந்த மந்திரத்தின் மூலம் ஒருவரது மூளையை முற்றிலுமாக நமது கைவசப்படுத்தி அவரை நமது ஏவலாளாக ஆக்கிவிடவும் முடியும்.

இதே போல மாந்திரிகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் என்னொரு வார்த்தை செய்வினை என்பதாகும். தனது சொந்த விருப்பத்தின் படி செயல்பட்டு கொண்டு லாபத்தையும். வெற்றிகளையும் அநுபவத்தி வரும் ஒருவனை மந்திரங்களால் தடுத்து அவன் மனதை பல வழிகளில் திசை திருப்பி விட்டு கடேசியில் அவனை படுகுழியில் தள்ளுவதே செய்வினையின் முக்கிய செயலாகும் இதன் மூலம் ஒருவனின் பொருளாதாரத்தையும் அழிக்கலாம் ஆரோக்கியத்தையும் நீர்த்து போக செய்யலாம்.

அடுத்ததாக உள்ளது வைப்பு என்பதாகும். இது மந்திர வழியிலோ மருத்து வழியியோ ஒரு பொருளை உண்ண கொடுத்து அல்லது அவர்களின் ஆடையில் உடம்பில் தடவி விட்டு அவர்களை வசிய படுத்துவதே வைப்பு என்பதன் அர்த்தமாகும். இப்படி பட்ட தீய காரியங்கள் மாந்திரிகத்தில் ஏராளமாக இருக்கிறது.

இதை படிக்கும் போது ஒரு சந்தேகம் வரும் இவைகளை எல்லாம் ஒரு குறிப்பிட்ட மனிதர் மீதோ குடும்பத்தின் மீதோ பிரயோகம் செய்வதற்கு என்னென்ன தேவைப்படும் என்பதாகும் அதாவது நாம் தாக்க வேண்டிய எதிரிகளிடமிருந்து. என்னென்ன பொருள்களை எடுத்து பிரயோகம் செய்ய வேண்டும் என்பதே இந்த சந்தேகத்தின் அர்த்தமாகும் ஒருவருக்கு தீய மந்திரங்களால் பாதிப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் அவர்களின் புகைப்படமோ வியர்வை மற்றும் ரத்தம் படிந்த துணிகளோ தலைமுடியோ காலடி மண்ணோ விந்தனுவோ வேண்டுமென்று மாந்திரிகர்கள் சொல்கிறார்கள். அந்த பொருள்களை வைத்து என்னென்ன காரியங்களை செய்யலாம் என்பதை இனி வரும் பகுதிகளில் சிந்திப்போம்.

மேலும் மாந்தீரிகம் அத்தியாயங்கள் படிக்க http://2.bp.blogspot.com/-AY0hvq1bmz8/T71L-jYmGyI/AAAAAAAAKWo/o0TFl42_q6Y/s1600/40px-Book-icon-gif.gif



மேலும் படிக்க ►

தமிழர்கள் விதியை நம்பாதவர்களா ?

,


        ந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் திருமதி,இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் ஜக்கிய நாட்டு சபையில் ஒரு முறை உறையாற்றுகின்ற போது இந்தியர்களின் உயரிய மனப்பான்மையை உலக மக்களுக்கு எடுத்து காட்ட தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற வரியான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தத்துவத்தை உரக்க சொன்னார், இந்த சம்பவத்திற்கு முன்பே தமிழக அளவில் புகழ் பெற்றிருந்த இந்த வார்த்தை இந்திய அளவிலும் புகழுக்குரியதாக கருதப்பட்டது,

        சமிபத்தில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் லட்சிய வரிகளாக நமது முதல்வர் அவர்களால் இந்த வரியே பிரதானப்படுத்தப்பட்டது, தமிழ் இலக்கியத்தின் வாசனையை கூட அறியாத மிக சாமான்ய மக்கள் தங்களது குலப்பெருமையை நிலை நாட்டுவதற்காக அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் வாசகமாகவும் இது ஆகிவிட்டது, அப்படி உபயோகிப்பவர்களில் பலருக்கு இதன் உண்மையான அர்த்தம் கூட தெரியவில்லை, சமீபத்தில் ஓமன் நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு நண்பர் வயிற்ற பிழைப்பிற்காக பல நாடுகளுக்கு ஓடவேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எதை தங்களது சொந்த ஊர் என்பார்கள், அப்பன் பிறந்த ஊரையா? தான் பிறந்த ஊரையா? எதையுமே உரிமை கொண்டாட முடியாது, “யாதும் ஊரோ யாவரும் கேளிர்” என்று போக வேண்டியது தான் என்றார்,
   
        குழந்தைகளுக்கு எது சொந்த ஊர் என்பது இருக்கட்டும், எல்லோரும் எதிலேயும் உரிமை கொண்டாட முடியாத நிலை வருகின்ற போது யாதும் ஊரே என்று தமிழ் இலக்கியத்தை வம்புகிழுத்து சோர்வாக இதை சொல்லுகிறீர்களே அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்டேன், அவர் என்னை முழுமையாக அறிந்தவர் போதுமான உலக அறிவு எனக்கு கிடையாது என்ற ரகசியம் அவருக்கு எப்படியே தெரிந்திருக்கிறது, அதனால் எனது இலக்கிய அறியாமையை போக்க சிறப்பான விளக்கம் ஒன்றை தந்தார், நான் பிறந்த ஊரில் மட்டும் தான் மரம் மட்டை இருக்கிறதா என்ன? உலக்திலுள்ள எல்லா ஊர்களிலும் தான் அவைகள் இருக்கின்றன, எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் சக்கரை இனிக்கிறது, மிளகாய் காரமாக இருக்கிறது, அதனால் இது என்னது அது உன்னது என்று போட்டி எதற்கு? எல்லா ஊருமே நம்ம ஊருதான் என்பதை எல்லோரும் கேட்டுக் கொள்ளுங்கள் என்பது தான் அந்த பழமொழியின் விளக்கம் , என்று நான் புரிந்து கொள்ளும் வண்ணம் சொன்னார், பல காலமாக தமிழ் இலக்கியத்தை படித்துக் கொண்டிருந்தாலும் கேளிர் என்ற வார்த்தைக்கு உறவினர் என்று தப்பாக பொருள் கொண்டு இருக்கிறோமே எல்லோரும் கேளுங்கள் என்றல்லவா கனியன் பூங்குன்றனார் எழுதி இருக்கிறார் , என்று உலகை நொந்து கொள்வதற்கு பதிலாக என்னை நொந்து கொண்டேன்.
             தமிழர்களாகிய நாம் எப்போதுமே வைர மேடையில் உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுப்பதில் கெட்டிகாரர்கள், சில காலத்திற்கு முன்பு தமிழர்களை ஒரு விசித்திரமான நோய் தாக்கியது, ஜன்னி கண்டவனுக்கு கை. கால்கள் இழுத்து கொள்வது போல இந்த விசித்திர நோய் அதிகமாக தாக்கியவர்கள் ராமர் படத்தை விளக்குமாரால் அடித்தார்கள், தெருமுனையில் தேமே என்று உட்கார்ந்துயிருந்த பிள்ளையாருக்கு அசிங்கமானதால் அபிஷேகம் செய்தார்கள், திடிரென்று ஒரு நாள் இந்த நோயின் உச்சகட்ட தாக்குதலால் தூங்கி கொண்டிருந்த திருமூலரை தட்டியெழுப்பி அவர் எழுதி பரன் மீது போட்டிருந்த “ஒன்றே குலம். ஒருவனே தேவன்” என்ற வாசகத்தை பிடுங்கி வந்து தெரு தெருவாக பிலாக்கணம் செய்தார்கள்,

        அப்போது கூட நம் அம்மாஞ்சி தமிழனுக்கு இவர்களுக்கு பிடித்திருப்பது பகுத்தறிவு என்ற விசித்திர நோய் என்று தெரியவேயில்லை, கடவுள் இல்லை என்று சொன்ன போதும் கைதட்டினான், ஒன்றே தேவன் அதாவது ஒரு கடவுள் உண்டு என்று சொல்லிய போதும் கைதட்டினாள், இப்படி கைதட்டி. கைதட்டியே தமிழனுக்கு தனது சொந்த இலக்கிய மரபுகள் எல்லாமே மறந்து போய்விட்டது,பழங்கால தமிழன் நாத்திகன்  என்று ஒரு கூட்டம் இன்றைக்கும் உறுதியாக நம்பிக் கொண்டு நாட்டில் திரிகிறது,

        பகுத்தறிவாளர்கள் என்ற இந்த திருகூட்டத்தார் இப்போதுயெல்லாம் தங்களை தமிழறிஞர்கள் என்றும். தமிழ் ஆர்வலர்கள் என்றும் அழைத்து கொள்கிறார்கள், இவர்கள் மேடையில் முழங்கும் கருத்துக்களை ஏதாவது ஒரு தொல் பழங்கால புலவன் தப்பி தவறி உயிர் பெற்று வந்து கேட்டு விட்டால் நடுத்தெரு புளியமரத்தில் தூக்கு போட்டு கொண்டு விடுவான், ஆதிகால தமிழனுக்கு இறையுணர்வே கிடையாதா? விதி. கர்மா. மறுபிறப்பு என்பதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாதா? சங்ககால தமிழ் மன்னர்கள் யாரும் நெற்றியில் திருநீறு கூட பூசுவது கிடையாத இவர்களுக்கு எப்படிதான் நீறு  பூசாத மன்னனின் படம் கிடைத்ததோ தெரியவில்லை, அல்லது இவர்கள் எடுத்த சினிமாவை தான் சங்ககால ஆதாரமாக வருங்கால தமிழகம் ஏற்றுகொள்ள வேண்டும் போல் உள்ளது,

        செம்மொழி மாநாட்டை பற்றி திருக்குவளை திருமகனார் உடன்பிறப்புகளுக்கு எழுதியிருந்த கடிதத்தை மறுமுறை படித்து பார்க்கும் போது ஓவென்று கதறி சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் போல் உள்ளது, பண்டைய தமிழ் புலவர்கள் விதியை நம்பும் கூனர்களை நிமிர்த்தி வைத்தார்களாம், அதுவும் எந்த பாட்டை பாடியென்றால் புறநானூற்றில் உள்ள யாதும் ஊரே என்ற பாடலை பாடித் தானாம் தமிழ் மக்களுக்கு இலக்கிய அறிவே கிடையாது, அவர்கள் படித்தது எல்லாம் “டாலாக்கு டோல் டப்பிமா”. போன்ற அரிய கவிதைகளை தான் என்று முடிவுக்கே வந்து விட்டார்கள் போல இருக்கிறது, இவர்கள் பேச்சை எல்லாம் கேட்க்கும் போது சங்ககால தமிழ் இலக்கியங்கள் எல்லாமே கடவுள் மறுப்பு இலக்கியங்கள் தானோ என்ற எண்ணம் சாதாரணமாக எல்லோருக்கும் வந்துவிடுகிறது, அதை தடுத்து உண்மையான தமிழ் இலக்கியத்தின் முகத்தை உலகுக்கு காட்ட வேண்டும், என்று நினைப்பவர்களின் குரல்களை தற்கால ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை அல்லது  புறகணித்து விடுகிறது, சரி இந்த கந்த கூலங்களின் கருத்துக்களை எல்லாம் மூட்டை கட்டுவோம், உண்மையில் கனியன் பூங்கன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலில் உலக பொதுவுடமை சித்தாந்தத்தை பற்றி தான் பேசுகீறாரா அல்லது வேறு எதை தான் சொல்லுகிறார், இந்த பாடலின் முழுமையான பொருள் என்ன என்று அறிந்து கொள்வதற்கு இலக்கிய ரசனையே இல்லாதவனுக்கு கூட ஆர்வம் ஏற்படுவது இயற்கை, அந்த ஆர்வத்தை தீர்த்து கொள்ள நாமும் கூட கொஞ்ச நேரம் புறுநானூறு என்ற சங்கதமிழ் பூஞ்சோலைக்குள் சென்று உலாவி வரலாமே
        அழகான நீலவானம் திடிரென மகா காளியின் கோர உருவம் போல் கருத்துவிடுகிறது, தூர தூர பிரதேங்களில் அலைந்து கொண்டிருந்த மேககூட்டம் எல்லாம் ஒன்றாக ஒரே இடத்தில் கூடி விட்டன, இரவு வந்துவிட்டதோ என பறவை கூட்டங்கள் கூடு தேடி பறக்க ஆரம்பித்து விட்டன, வனவிலங்குகள் புதருக்குள்ளும் குகைகளுக்குள்ளும் மறைத்து கொண்டன, கறுத்த வானத்தில் நெடிய வாளால் வெட்டி கிழித்தது போல் மின்னல் வெட்டுகிறது, ஒன்று இரண்டுயென அடுக்குகடுக்கான மின்னல் சரங்கள் பூமியை நோக்கி பாய்கின்றன, நெஞ்சம் கிடுகிடுக்கும் வண்ணம் இடி பேரோசை செய்கிறது, இடிகின்ற இடியின் எதிரொலி கருவிலிருக்கும் குழந்தையின் காதுகளை கூட செவிடாக்கிறது,        சரம் சரமாக மழைத்துளிகள் பூமியின் மீது இறங்குகின்றன, சின்ன கத்திகளாக வந்த துளி ஈட்டிகளாக நீள்கிறது, சிறிது நேரத்தில் வானத்திலிருந்து கருங்கல் குவியல் கொட்டுவது போல் மளமளவென மழை பூமியெங்கும் வெள்ள காடாக பெருக்கெடுத்து ஓடுகிறது, நிற்காத. நிதானிக்காத மழை வெள்ளம் ஆரம்பத்தில் குழாங்கற்களை உருட்டிக் கொண்டு ஓடியது, சிறிது நேரத்தில் பாறாங்கற்களை புரட்டி போட்டது, நேரம் செல்ல செல்ல பெரிய பெரிய பாறைகளையே உருட்டிக் கொண்டு பேரிச்சலோடு வெள்ளமாய் பாய்ந்தோடியது, மழை இப்போது மட்டுபடுகிறது,

   பெருங் கூச்சல் போட்ட வெள்ள பெருக்கு ஆரவாரத்தை குறைக்கவில்லை என்றாலும் வேகத்தை மட்டுபடுத்திக் கொண்டு சமநிலத்தை நோக்கி ஆற்று வெள்ளமாக பாய்ந்தோட ஆரம்பித்தது, நிலமகளை தொட்டவுடன் வருண தேவனுக்கு காதல்வெறி ஏறிவிட்டது போல் ஆற்றின் கரையும் உடைத்து கொண்டு ஊருக்குள் புகுந்தும் சமூத்திரத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது, நதி வெள்ளம் அப்படி போகும் போது எதிர்பட்ட பொருட்களை  எல்லாம் அடித்து புரட்டி தன்னோடு இழுத்துக் கொண்டு முன்னேறியது, ஆடு. மாடு. கோழி வண்டி. மரக்கட்டை. வீட்டு கூரை இன்னும் விதவிதமான பொருட்கள்  எல்லாம் ஆற்று வெள்ளத்தில் முட்டி மோதி போகின்றன, அவைகள் ஒன்றையொன்று தொடுகின்றன, தள்ளுகின்றன, பிரிந்து தள்ளி போகின்றன, சுற்றி. சுற்றி வருகின்றன, சுழலுக்குள் அகப்பட்டு அடி ஆழத்திற்கு போய் மீண்டும் மேல் ஏழும்பி பாய்ந்து ஓடுகின்றன, இந்த செயல்கள் எல்லாம் நீரோட்த்தில் மிதந்து கொண்டு தான் நீரோட்டத்தின் விருப்பப்படி தான் நடக்கிறது,
     பொருட்கள் நீர் சக்தியைவிட்டு வெளியேற முடியாது, எதிர்நீச்சல் போட நினைத்தால் எதுவும் நடக்காது, ஆற்றில் மிதந்து செல்லும் பொருட்கள் எப்படி வெள்ளத்திற்கு கட்டுபட்டதோ அதே போல தான் உலக மாந்தர் வாழ்க்கை எல்லாம். விதி என்ற வெள்ளோட்டதிற்குள் கட்டுப்பட்டு இயங்குகிறது, விதி என்பது ஒருவழி பாதை, அதில் முன்னோக்கி நடந்து கொண்டு இருக்கலாமே தவிர திருப்பி நடக்க முடியாது, இந்த விதி மனிதனை மட்டுமல்ல அண்டசரா சரங்கள் அத்தனையும் கட்டுப்படுத்துகிறது,
       
        விதி வழி தான் எல்லாம் நடக்கிறது என்பது புதிய கண்டுபிடிப்பல்ல, வாழ்க்கையில் உள்ள சகல விதமான இன்பதுன்பங்களையும் ஆண்டு அனுபவித்து அறிவால் தெளிந்து எத்தனையோ சான்றோர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள், அவர்களின் ஆப்த வாக்கியம் குழம்பிய எத்தனையோ மனங்களை தெளிவடைய வைத்து இருக்கிறது, எனவே விதி தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது, என்பது குழப்பமோ. கலக்கமோ. மயக்கமோ. சந்தேகமோ இல்லாத உண்மையாகும்,     
     விதி என்ற வெள்ள பிரகாவத்தில் இழத்த இழப்புகளுக்கெல்லாம் உடன்பட்டு செல்லுகின்ற மாந்தர் குலத்தில் பெரியவர் யார் ? சிறியவர் யார்.?  உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர் யார் ? மன்னன் யார் ? குடிமகன் யார் ? யாரை எப்படி பிரித்து எடுப்பது எல்லோருமே அடிப்படையில் சரி நிகர்  சமமானவர்கள் தான், விதி என்ற நீதி சட்டத்தில் இயக்கப்படுகின்ற சாமானியவர்கள் தான் அனைவருமே

   கடவுளின் பெருங்கருணையாகிய விதி என்ற வெள்ளம் மனிதர்களை குழந்தையை போல் இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்து போகிறது, அது எங்கே கொண்டு சேர்க்க போகிறது, என்னவாக மாற்ற போகிறது, மனிதர்களின் இறுதி கட்டம் எப்படி இருக்க போகிறது, எதையுமே கற்பனை செய்து பார்கக் கூட முடியாத நிலையில் தான் மனிதன் இருக்கிறான்,

        எது முடிவு. எது விடிவு என்று தெரியாத மண்ணுலக வாழ்வில் எதுவரை இருப்போம். எப்போது போவோம் என்ற நிலையற்ற வாழ்க்கை இருக்கும் வரையில் நான் பெரியவன். நீ சிறியவன். நீ அரசன். நான் அடிமை என்ற பேதங்கள் எதற்கு என் நாடு உயர்ந்து. எனது கிராமம் அழககானது. அந்த நாடு எதற்கும் உதவாத குப்பை தொட்டி. அந்த மனிதர்கள் சுத்த அயோக்கியர்கள். அவன் என்னை கெடுத்து விட்டான், உலகத்து கஷ்டத்தை எல்லாம் நான் ஒருவன் மட்டுமே அனுபவிக்கிறேன், என் பசிக்கு உணவு தந்தவன் இவன் என் நோய்க்கு மருந்து தந்தவன் இவன் என்று நன்றி பாராட்டுவதிலோ. கோபம் கொண்டு ஒதுக்கி வருவதிலோ எந்த பயனும் இல்லை
    மரணத்தை கண்டும் பயப்படுவது மடமையானது, அது நீ விரும்பினாலும். விரும்பாவிட்டாலும் ஒரு நாள்  வந்தே தீர கூடியது, உயிர்களுக்கு மரணம் என்பது புதிதானதல்ல, நோயும் என்பதும் புதிதல்ல, வருவதும். போவதும் இயற்கையானது தான், இன்ப துன்பங்கள் என்பதும் வெற்றி தோல்வி என்பதும் காலகாலமாக மாறாமல் இப்படியே  இருக்கும் போது வாழ்க்கையை பற்றி என்ன முடிவு எடுக்க முடியும், வாழ்க்கை என்பது இன்பத்தால் நிறைந்த சாகரமும் அல்ல, துன்பங்கள் சூழந்த ஆகாஷமும் அல்ல, இதனால் சந்தோஷப்படுபவதும். துக்கப்படுவதும். சிறபிள்ளைதனமானது,

        அறிவில் சிறந்த அறிவாளிகளும். ஞானிகளும். மாபெரும் வீரர்களும். தியாகிகளும். போற்றுதலுக்குரியவர்கள் அல்ல, முட்டாள்களும். அசடர்களும். கொலைகாரர்கலும். கொள்ளைக்காரர்களும் வெறுத்து ஒதுக்க தக்கவர்களும் அல்ல, இவர்கள் எல்லோருமே நமக்கு சொந்தகாரர்கள் தான், கல்லானாலும், மண்ணாலும்  நமக்கு சொந்த ஊர்கள் தான், எதிலும் பேதமில்லை, யாரும் அந்நியமில்லை, எல்லாம் நமது சொந்த பூமி. எல்லோருமே நமது சொந்த ரத்தம். இது தான் கனியன் பூங்குன்றனாரின் அற்புத பாடலுக்கு ஆழமான அர்த்தம்,

அவர்.
 ""யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!""

        என்று பதிநான்கே வரிகளில் நீண்ட நொடிய வாழ்க்கை அனுபவத்தை அழகான ஓவியமாக வரைந்து தந்துவருகிறார், இதுவரை இந்த பாடலின் முழுமையான கருத்தை தெரியாதவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும், கணியன் பூங்குன்றனார் தற்கால மேதாவிகள் வாய் கிழிய பேசுவது போல் அனுபவத்திற்கு ஒத்துவராத கருத்துக்கள் எதையும் பேசி விடவில்லை என்ற திருப்தியும் ஏற்படும், அப்படி திருப்தி அடையும் பல மனங்களில் ஒரு கேள்வியெழும்பி நிற்கும்,

        மனித வாழ்க்கை முழுவதுமே விதி என்ற சட்டத்தின் கீழ் தான் நடக்கும். நடந்து கொண்டிருக்கிறது என்றால் அவனது சொந்த கருத்து. முயற்சி. உழைப்பு என்பதெல்லாம் அர்த்தமே இல்லாத விஷயமல்லவா? ஆயிரம் மூட்டைகளை சுமந்து ஏற்றி இறக்கினாலும் ஒரு பிடி சோறு கிடைக்காது என்ற போது முயற்சி எதற்கு? உழைப்பு எதற்கு?
      மனித முயற்சிகள் எதுவும் இல்லை என்றால் அன்றாட வாழ்க்கை மாற்றமேயில்லாத பாறாங்கல்லாய் அல்லவா கிடக்கும், சிந்து சமவெளி நாகரிகம். கிரேக்க நாகரிகம். மாயன் நாகரிகம் என்பவைகள் எப்படி தோன்றியிருக்கும், இன்று கணிப்பொறி. இணையதளம். செயற்கை கோள் என்று எப்படி முன்னேறியிருக்கும், இன்று வளாந்து இருக்கும் உலகம் பெற்றிருக்கும் வசதிவாய்ப்பு அனைத்தும். தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் ஓய்வில்லாத உழைப்பால் கிடைத்ததல்லவா? விதிப்படி தான் அனைத்துமே நடக்கும். விதியை மாற்ற இயலாது. என்று கன்னத்தில் கை ஊன்றி முழங்காலை கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்திருந்தால் சாலையில் பேருந்து ஏது? வயலில் நெல்மணி தான் ஏது? என்ற அந்த கேள்வி விஸ்வரூபம் எடுத்து விடை காண துடித்து நிற்பது இயற்கை, இன்னொரு கேள்வி கூட தோன்றும், பழங்கால தமிழ் இலக்கியங்கள் கடவுளை மறுக்கவில்லை விதியை எதிர்க்கவில்லை என்பது இருக்கட்டும் மனித முயற்சியில் விதியை மாற்றலாம் என்ற ஒரு புலவன் கூட அந்த காலத்தில் சிந்திக்கவில்லையா? அப்படியெதுவும் ஆதாரம் இல்லையா? என்ற சிந்தனையும் எழும்பும்,

        விதியின் மேல் நம்பிக்கை என்பது தமிழ்நாட்டிற்கோ. இந்தியவிற்கோ சொந்தமானது மட்டுமல்ல, உலக முழுவதுமே அந்த நம்பிக்கை காலகாலமாக இருந்து வருகிறது, இந்த நம்பிக்கையிலிருந்து முழுமையாக இல்லை என்றாலும் சிறிதளவு மாறுபட்ட தேசம் எது என்று கேட்டால் கிரேக்கம் என்று  சொல்லலாம், ஆதிகால கிரேக்க மக்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் தெய்வங்கள் தான் தீர்மானிக்கின்றன என்று நம்பினார்கள், ஒரு விளையாட்டு மைதானத்தில் கிடைக்கும் பந்தை வீரர்கள் தங்களது விருப்பப்படி உதைத்து விளையாடுவது போல் மனித வாழ்க்கையும் தெய்வங்கள் தங்கள் இஷ்டப்படி பந்தாடுவதாக அவர்கள் நம்பினார்கள், பேரழிவுகள். யுத்தங்கள் போட்டி பூசல்கள் நிறைந்த சதுரங்க உலகில்  மனித காய்களை உருட்டி தெய்வங்கள் விளையாடுவதாக கிரேக்கர்கள் நம்பியதை மகாகவி ஷேக்ஸ்பியர் அழகான கவிதை வரிகளில் நமக்கு சுட்டி காட்டுகிறார்,

        பறக்கும் பட்டாம்பூச்சியை பிடித்து
        சிறகை உடைக்கும் குழந்தை போல்
        மனிதர் வாழ்க்கையை எடுத்து
        களி நடம் புரியும் தெய்வம்

  
         As flies to wanton boys
              are we to gods;
        They kill us for their sport
     மேல் நாடெங்கும் விதி பற்றிய நம்பிக்கை பரவி கிடந்ததற்கு இந்தியாவின் கருத்துக்கள் அங்கு பரவியிருந்தது என்பது உண்மையா? அல்லது அங்கிருந்து தான் அந்த கருத்துக்கள் இங்கே பரவியதா? என்பதை ஆராய்ச்சி செய்வது நமது நோக்கமில்லை என்றாலும் விதி என்ற எண்ணம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானதே என்பதை சுட்டிக்காட்ட விரும்பினேன் மேலும் கணியன் பூங்குன்றனார் இப்படியொரு பாடலை எழுத வேண்டிய அவசியமென்ன, அந்தகால புலவர்களில் பலர் நாடாளும் ; மன்னர்களையும் பணக்காரர்களையும். இந்திரன். சந்திரன் என்ற எழுதி பரிசுகளை பெற்று போவது போல் இவரும் எதையாவது. எந்த மன்னனையாவது போற்றி பாடிய போயிருக்க வேண்டியது தானே. அதை விட்டுவிட்டு எல்லோரும் சமம் தான் என்று பாட வேண்டிய அவசியமென்ன? 
 
       நமது தமிழர்களுக்கு தலைவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு ஏதாவது குற்றங்குறைகள் நடந்துவிட்டால் தலையை மொட்டை அடித்து கொள்வார்கள். நெருப்பு மிதிப்பார்கள், பெட்ரோலை ஊற்றி தங்களையும் எரித்து கொள்வார்கள். மற்றவர்களையும் எரித்து பார்ப்பார்கள். சோறு போட்ட அப்பனை அடித்து போட்டு மனங்கவர்ந்த தலைவர்களின் சினிமா படத்திற்கு காத்து கிடக்கும் எத்தனையோ தமிழர்களை நாம் அன்றாடம் பார்க்கின்றோம், இது தமிழனுக்கு இன்று நேற்று ஏற்பட்ட வியாதியல்ல, சங்ககாலத்திற்கு முன்பே பற்றி கொண்ட தீராத வியாதியாகும், பக்கத்து நாட்டு அரசன் பையனுக்கு பெண் தரவில்லை  என்று போருக்கு கிளம்பி. தோற்றுபோவான் மன்னன், மன்னன் தோற்றுவிட்டானே என்று எங்கோ மூலையில் இருக்கும் இளைஞன் தன் உயிரை மாய்த்து கொள்வான், இது நேற்றயை தினதந்தி செய்தியல்ல, சங்ககால வரலாற்று பதிவாகும்,

        பல் போகும் காலம் வரையில் மற்றவனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட தமிழனை. தலைவன் என்பவன் கடவுளுக்கு சமமானவன் என்று தூக்கி வைத்து கொண்டாடும் தமிழனை. தலைவனின் நலத்திற்காக தன் பெண்டாட்டி. பிள்ளையை கூட பலி கொடுக்க தயங்காத தமிழனை பார்த்த கணியன் பூங்குன்றனார் நெஞ்சு பதபதைக்க பார்த்து தலைவன் என்பவன் தனியான ஒரு இனமல்ல உன்னை போலவும். என்னை போலவும் சாதாரண மனிதன் தான். நீயும். நானும் அம்மாவின் வயிற்றில் பத்துமாதம் இருந்தது போலவே தான் அவனும் இருந்தான், தலைவன் என்பதற்காக பதினைந்து மாதம் கருவறை வாசம் அவனுக்கு   கிடையாது, விதி என்ற நதியில் உருண்டு ஓடும் பல கட்டைகளில் ஒரு கட்டை தான் அவன், அவனுக்கென்று தனியாக மரியாதை தருவதோ. அவனுக்காக மற்றவர்களை அவமரியாதை செய்வதோ சரியான முறையல்ல, எல்லோரையும் சமமாக பார்க்க பழகி கொள் என்ற சமூக அக்கறையோடு தான் பூங்குன்றனார் இந்த பாடலை பழுதி இருக்கிறார், அதற்கு  எல்லா தரப்பு மக்களிடமும் அழகாக பதிந்து இருந்த விதி என்ற நம்பிக்கையை கவிதை கருவுக்கு பின்னியாக எடுத்துக் கொண்டார், 
          மற்றப்படி ஆதிக்கால தமிழர்கள் விதியை நம்புவார்களாக மட்டுமில்லை சில பேர் அதை விமர்சனம் செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள், ஆனால் அந்த விமர்சனம் இப்போது சிலர் செய்வது போல் அர்த்தம் இல்லாததாகவும். மற்றவர்களின் மனதை புண்படுத்துவதாகவும் அமையவில்லை என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்,

        ஒவ்வொரு தனி மனிதனும் தனது வாழக்கையில் விரும்பியோ. விரும்பாம்பலோ ஏற்படுகின்ற இன்ப துன்பங்களை விதியின் பரிசு என்ற மன திருப்தியோடு ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை அமைதியுடன் நடத்துகிறான், தன் வாழ்வில் ஏற்படுகின்ற ஒவ்வொரு துயரத்திற்கு யாரோ ஒருவர் காரணம் என்று மனிதன் பொங்கி எழுந்தால் சமுதாய அமைதி கெட்டுவிடும் என்பதை விட மனிதனின் உடல்நலமும் பாழ்பட்டுவிடும், அனுபவத்தின் வாயிலாக பார்க்கும் போது விதியை நம்புவதினால். பாதிப்புகள் எதுவும் பெரியதாக ஏற்பட்டுவிடவில்லை, தன் சொந்த வாழ்க்கையில் விதியை நம்பும் தமிழன் பொது வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளை விதி என்று அமைதியாக ஏற்றுக் கொண்டு போனதாக சரித்திரம் இல்லை,

        கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி காலையில் ராமனை அரசாள வாவென்று அழைத்தான் மன்னன் மாலையில் காடாள போவென்றாள் சிற்றன்னை இதைக் கேட்ட தம்பி லஷ்மணன் அண்ணன் ராமனுக்காக பெற்ற தந்தையின் படையினரையே தாக்க ஆயத்தமாகிவிட்டான், தசரதனின் பெரும்படையால் பூமியில் பாரம் ஏற்பட்டுவிட்டது, அதனால் அவன் படையை ஒழிப்பேன், எதிர்த்து நின்றால் தகப்பன் என்றும் பாராமல் தசரதனோடும் மோதி வெற்றிக் கொள்வேன், வேறு யார் தடுக்க வந்தாலும் அவர்களையும் வெட்டி வீழ்த்துவேன், ரத்ததின் மீது தான் அண்ணன் ராமன் சிம்மாசனம் ஏறுவது என்று  இருந்தால் அதை நிறைவேற்றியே தீருவேன் என்று வீர முழக்கம் செய்தான்,

    தம்பியின் போர்க்கோலம் அண்ணனுக்கு தெரிந்தது, நெஞ்சு படபடக்க தம்பியை தடுக்க ஓடி வந்தான். தடந்தோள் ராமன், கோபம் என்பதே என்னவென்று அறியாத குணக்குன்றல்லவா நீ ? ஆயுதம் தூக்கலாமா? அதுவும் வணங்கத்தக்க தகப்பானாருக்கு எதிராக? கூடாது, அமைதி கொள் என்று தம்பியை சாந்தப்படுத்துகிறான், இளைய பெருமானின் கோபம் அப்போதும் தனியவில்லை, அண்ணா! இப்போதே உனக்கு மூடி சூட்டியாக வேண்டும், அதை தடுக்க நினைப்பவர்களை எரியூட்டியாக வேண்டும், என்ற கோப நெருப்பை கொப்பளிக்கிறான், அவனது ஆத்திரம் ராமனுக்கு வருத்தத்தை தந்தது, தகாத மொழியால் தம்பி தகப்பானரையும். தாயாரையும் பேசுவது பிடிக்கவில்லை, எவ்வளோ சமதாப்படுத்த முயலுகிறான், ராமன் நில் என்ற வார்த்தையை உச்சரிக்க நினைக்கும் போதே நின்றுவிடும் லட்சுமணன் ராமனுக்காக வந்த கோபத்தை ராமன் தடுத்தும் நிறுத்த முடியவில்லை, அதனால்

        “நதியின் பிழையன்று
            நறும்புனல் இன்மை அற்றே
        பதியின் பிழையன்று பயந்து
            நமைப்புரந்தாள்
        மதியின் பிழையன்று. மகன் பிழை
            அன்று. மைந்த
        விதியின் பிழை. நீ இதற்கு
            என்னை வெகுண்டதென்றான்”,


        என்று கூறி சமாதானப்படுத்த முயற்சித்தான் நேற்ற வரை இரு கரையும் தொட்டு ஓடிய ஆற்று வெள்ளம் இன்று காய்ந்து போய்விட்டது என்றால் அது நதி செய்த குற்றமா? வரத்தை கொடுத்தது தந்தையின் குற்றமா? அதை வேண்டி கேட்டது தாயின் குற்றமா? அல்ல தம்பி அல்ல. யாரும் குற்றம் செய்யவில்லை, தம்பி பரதன் கூட குற்றவாளியல்ல, பிறகு யார் குற்றவாளி என்று நினைக்கிறாயா இது யார் செய்த குற்றமென்று கலங்குகிறாயா இது விதி செய்த குற்றம், விதியால் வந்த குற்றம், இதற்காக கோபப்படுவது தவறு என்கிறான், நடந்த துயரத்திற்குகெல்லாம் காரணமாக இருப்பது கண்ணுக்கு தெரியாமல் எங்கோ மறைந்திருக்கும் விதி எனும் போது கருவிகளான மனிதர்களை வெறுப்பது பாவம் என்பது ராமனின் எண்ணம்,
        ராமணின் வார்த்தையில் அறிவு மட்டுமல்ல அனுபவமும் கலந்திருப்பது இளைய பெருமானின் மனதிற்கு தெரிகிறது, ஆனால் அறிவு அதை ஏற்று கொள்ள மறுக்கிறது, நிகழ்ந்துவிட்ட அநீதியை சகித்துக்கொள்ள அறிவால் இயலவில்லை, அண்ணன் காட்டிற்கு போக போகிறான் என்பதை நினைக்க நினைக்க உலையிலிருந்து நெருப்பும் புகையும். பொங்கி வருவது போல் லஷ்மணனின் இதயம் கொதித்தது, சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் அறியாமையை கண்டு வறுமையை கண்டு. தீய இயல்புகளை கண்டு ஒரு நல்ல தலைவனின் மனம் என்ன பாடுபடுமோ அதே பாட்டை லஷ்மணன் பட்டான்,

   அண்ணா? என் மனம் ஆற மாட்டேன் என்கிறது, நீ காடு செல்ல வேண்டும் பரதன் நாடாள வேண்டும் என்று விரும்புகின்ற கைகேகியை என்னால் மன்னிக்க முடியவில்லை, அவளின் சூழ்ச்சிக்கு தோள் கொடுக்க தேவாதி தேவர்கள் வந்தாலும் நீ விதி விதி என்று சொல்கிறாயே அந்த விதியே கண் முன்னால் வந்து நின்றாலும் எல்லாவற்றையும் வெல்லுகின்ற மாபெரும் விதியாக என்கையில் வில் இருக்கிறது, இது சாதாரண வில் அல்ல அண்ணா. வெல்ல முடியாத விதியை கொல்லும் எமன் இது. என்று அண்ணனின் ஆறுதலுக்கு மறுமொழி சொல்கிறான் தம்பி,

        “,,,,,,,,,,,,, கோள் இழைத்தாள்
            மதி மயக்கும்மதியாய். முதல்
        வானவர்க்கும் வல் இதாம்
            விதிக்கும் விதியாகும் - என்
        வில்(த்) தொழில்
            காண்டி” என்றான்
                    (கம்பராமாயணம்)


        நன்றாக முற்றி பழுத்த பலாசுலையை கொம்பு தேனில் ஊற வைத்து மாம்பழ சாற்றுடன் பிசைந்தெடுத்தால் என்ன சுவையோ  அந்த சுவை தான் கம்பனின் இந்த பாட்டு சுவை, பாடலின் சுவையை அனுபவிப்பது எல்லாம் இருக்கட்டும், விதியை நம்பு என்கிறான் அண்ணன், விதியை கொல்வேன் என்கிறான் தம்பி இருவருக்குள் இத்தனை முரண்பாடு ஏன்? அண்ணனனின் கூற்றை நம்புவதா? தம்பியின் கூற்றை நம்புவதா? குழப்பம் நமக்கு ஏற்படுகிறது, ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் போது குழம்ப வேண்டிய அவசியமேயில்லை என்பது தெளிவாக தெரிகிறது,

    அரசு பதவி போனது ராமனை பொறுத்து வரை தனிப்பட்ட விஷயம், அதனால் அவன் விதிவசம் என்று தன்னை சமாதானப்படுத்தி  கொண்டான், இளைய பெருமாளுக்கோ அது பொது விஷயம். தேச நலன் சம்பந்தப்பட்ட விஷயம், அதனால் அவனால் விதி என்ற சும்மா உட்கார்ந்து விட முடியவில்லை, போராட எழுந்து விட்டான், விதி என்பது உண்டா? இல்லையா? என்று ஆராயும் தருணம் இதுவல்ல விதி கொள்கை தமிழர்களுக்கு உண்டா? இல்லையா? என்பதே நம் முன்னால் நின்ற கேள்வியாகும், அந்த கேள்விகளுக்கு விடைகாண தான் நாம் கணியன் பூங்குன்றனாரையும். கவிசக்கரவர்த்தி கம்பனையும் உரசி பார்த்தேன், இருவரும் இன்றைய தமிழர்களின் வாழ்க்கை தத்துவம் எந்த நோக்கில் பார்க்கப்படுகிறதோ அதே நோக்கில் தான் ஏறக்குறைய அன்றும் பார்க்கப்பட்டு இருக்கிறது, பகுத்தறிவுவாதிகள் சொல்வது போல் பழம் தமிழர்களின் சிந்தனை மரபு இந்து மதத்திற்கு எதிரானது அல்ல, தமிழ் பண்பாட்டின் சாயல் தான் இந்து பண்பாட்டின் சாயலாக எப்போதுமே வெளிபட்டுக் கொண்டிருக்கிறது, இதை மக்கள் முழுமையாக புரிந்து கொள்ள உண்மையான இலக்கியவாதிகள் முன்வந்து உழைத்தால் போலி மத்தாப்புக்கள் பெட்டிக்குள் அடங்கி கொள்ளும்,


மேலும் படிக்க ►

ஆண்களே! தைரியமாக அழுங்கள்!!

,


   திகமா சிரிக்கும் பெண்களையும் அழுகின்ற ஆண்களையும் நம்ப கூடாது என்று சொல்வார்கள் அதாவது இதன் அர்த்தம் என்னவென்றால் ஆண்கள் அழக்கூடாது அழுகை என்பது ஆண்களுக்கு இல்லை என்பதாகும் உண்மையில் ஆண்கள் அழக்கூடாதா? அழுதால் என்னவாகிவிடும்?

நமது பண்பாட்டில் மட்டுமல்ல உலகத்தின் எந்த மூலையில் போய்கேட்டாலும் கம்பீரத்தின் இலக்கணமாக ஆண்கள் மட்டுமே காட்டப்படுகிறார்கள் விதிவிலக்காக ஆண் தன்மையுடைய பெண்களில் சிலர் கம்பீர வடிவாக காட்டபட்டாலும் அதிகமாக குறிப்பிடுவது ஆண்களை தான்

கம்பீரம் வீரம் போன்றவைகள் அழக்கூடாது அழுவது என்பது கோழைத்தனத்தின் அடையாளம் அஞ்சி நடுங்குபவர்கள் சோதனைகளை எதிரிகொள்ள முடியாதவர்கள் மட்டுமே அழ வேண்டுமென்று பொதுவான ஒரு நீயதி உலக முழுவதும் நடைமுறையில் இருக்கிறது இந்த நடைமுறை பழக்கம் இந்தியாவில் சற்று அதிகம் அதனால் தான் கோழைகளை நம்பாதே என்று சொல்வதற்காக அழுகின்ற ஆண்களை நம்பாதே என்று சொன்னார்கள்


எல்லாம் சரி அழுவது என்பது கோழைத்தனமா? அழுபவர்கள் அனைவரும் கோழைகளா? மனிதனாக பிறந்தவர்கள் அழாமல் இருக்க முடியுமா? முடியும் என்றால் அழுகின்ற உணர்ச்சியை ஆண்டவன் மனிதனுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்னை கேட்டால் அழுவது கோழைத்தனமல்ல திக்கு தெரியாத காட்டில் தன்னந்தனியாக தவிப்பவர்களுக்கு ஒற்றையடி பாதை வெளிச்சத்தை காட்டுவது போல் உணர்சிகளின் கொந்தளிப்பில் கிடந்தது உழலும் மனிதனுக்கு அழுகை என்பது தெளிவை காட்டும் ஞான வெளிச்சம் என்பேன்

கோழைதனத்தால் வருகின்ற அழுகை வேறு நயவஞ்சகத்தை மறைப்பதற்கு வடிக்கும் நீலி கண்ணீர் வேறு சோகத்தை தாங்க முடியாமல் வாய்விட்டு அலறி புலம்பும் அழுகை என்பது வேறு எனக்கொரு மகள் இருந்தாள் அவள் பூமியில் பிறந்தநாள் முதல் அவளை மண்ணில் நடக்க விடவில்லை நான் கைகளில் தாங்கினேன் அவளது ஒவ்வொரு சிரிப்பிற்கும் நான் ரத்த வேர்வை வடித்தாலும் அது எனக்கு சுகமாக இருந்தது அப்படி வளர்த்த அன்பு மகள் தன்னை எவனோ ஒருவன் காதலிக்கவில்லை என்று மரத்தில் கயிறு போட்டு தொங்கிவிட்டாள் இந்த நிலையில் நான் அழாமல் இருக்க முடியுமா? என்னை அழக்கூடாது என்று யாரும் தடை போட முடியுமா?

மரணத்தால் வருகின்ற இழப்புகளை தாங்க முடியாத துயரங்களை தாங்கி கொள்ள அழுகை என்பது அவசியம் ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் அழவில்லை என்றால் அவன் மனதில் எதோ ஒரு பாதிப்பு இருக்கிறது கண்ணீரால் நனைக்கபடாத துயரங்கள் மனதிற்குள் பெறுக பெறுக மனம் இறுக்கமாகிவிடும் நந்தவனத்தில் வாழ்ந்தாலும் இனம்புரியாத சூன்யத்திற்குள் கிடப்பது போல வாழ்நாள் முழுவதும் எரிந்த சாம்பலாகி விடும்


அழ வேண்டும் கண்களில் உள்ள கண்ணீர் வற்றி போகும் வரை அழவேண்டும் ஒரு துணியை தண்ணீரில் போட்டு காயவைப்பதற்கு பினிவது போல அழவேண்டும் ஒரு சொட்டு கண்ணீர் கூட மிச்சமில்லாத அளவிற்கு அழவேண்டும் அப்படி அழுதால் தான் துயரங்களை தாண்டி அதற்கு அப்பாலுள்ள வசந்த காலத்தை இருகரம் நீட்டி வாரி அனைத்து கொள்ள முடியும் எனவே ஆண்கள் அழக்கூடாது என்பது போலி வேஷம் அழாத ஆண்கள் இல்லை என்பதே எதார்த்த உலகம்

கடவுளின் வடிவான ராமன் கூட அழுதான் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தகப்பன் தசரதன் இறந்த செய்தி கேட்டு அழுதான் தனது காதல் மனைவி தன்னைவிட்டு எங்கோ காணமல் போனபோது அழுதான் தன தோளோடு தோள்நின்று தனது துயரத்தை தன் துயரமாக ஏற்றுக்கொண்ட சகோதரன் யுத்த களத்தில் காயப்பட்டு வீழ்ந்த போது அழுதான் அந்த அழுகையை யாரும் கோழைத்தனம் என்று சொல்லவில்லை மாறாக அது ராமனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகத்தான் அறியப்பட்டது

இந்த உலகம் வேண்டாம் என்று சொல்வது காரியமுடிக்க நயவஞ்சகமாக சிரித்தாளே சூர்ப்பனகை அந்த சிரிப்பு பெண்ணுக்கு வேண்டாம் என்கிறது காரியமுடிக்க வஞ்சகமாக அழுதானே சகுனி அந்த அழுகை ஆண்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறது மற்றப்படி நீ அழவே கூடாது என்று யாரவது சொன்னால் அவன் உன்னை மனநோயாளியாக்க முயற்சிக்கிறான் என்று தான் அர்த்தமாகும்


அதனால் நீ அழு நன்றாக அழு இரவு முடிந்து விடியற்காலை பொழுது வரும் பொழுது மனமும் உடலும் சந்திக்குமே ஒரு விதமான மலர்ச்சி அந்த மலர்ச்சியை அழுது முடித்தபிறகு நீ அனுபவிப்பாய் அந்த அமைதியில் தான் நீ எடுக்க வேண்டிய அடுத்தகட்ட முடிவுகள் தெளிவாகத்தெரியும் எனவே அழுகை என்பது தடைகல் அல்ல படிக்கல் என்பதை மனதில் வைத்து துயரங்களை போசுக்க அழு நன்றாக அழு.



மேலும் படிக்க ►
 

உஜிலாதேவி Copyright © 2010